நீலகிரி வன கோட்டத்தில் நடந்த பறவைகள் கணக்கெடுப்பில் 120 இனங்கள் உள்ளன

ஊட்டி: தமிழ்நாட்டில் பறவைகள் கணக்கெடுப்பு பணியானது ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு நடைபெறும். அதன்படி, 2022-23ம் ஆண்டிற்கான மாநில அளவிலான பறவைகள் கணக்கெடுப்பு நீர் பறவைகள், நிலப் பறவைகள் இரு இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டது. நீர்பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் நடத்தி முடிக்கப்பட்டது. இதில், நீர்நிலை பகுதிகளில் 35 ரகங்களில் சுமார் 900க்கும் மேற்பட்ட பறவையினங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து நிலப் பறவைகள் கணக்கெடுப்பு கடந்த 4,5ம்  தேதிகளில் நடத்தப்பட்டது.

நீலகிரி வன கோட்டத்தில் 20 பல்வேறு வகையான பகுதிகள் கணக்கெடுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. அதில், ஊரகத்தில் 5 பகுதிகளும் வனம் சார்ந்த 15 பகுதிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில், பறவைகள் கணக்கெடுப்பில் அரசு கலைக்கல்லூரியில் வனவிலங்கு உயிரியல் துறையில் பயிலும் சுமார் 40 மாணவ, மாணவியர் மற்றும் வனத்துறையை சார்ந்த 25 வன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.  இந்த பறவைகள் கணக்கெடுப்பில் சுமார் 120க்கும் மேற்பட்ட பறவைகள் மற்றும் 1886 எண்ணிக்கையிலான பறவைகள் கணக்கெடுக்கப்பட்டது. குறிப்பாக, கெத்தை பகுதியில் சுமார் 36 வகையான பறவைகள், 233 எண்ணிக்கையில் கணக்கெடுக்கப்பட்டது.

அவலாஞ்சி பகுதியில் 32 வகையான பறவைகளும் முக்கூர்த்தி பிஷ்ஷிங் ஹட் பகுதியில் 38 வகையான பறவைகள் 144 எண்ணிக்கையிலும் கணக்கெடுக்கப்பட்டது. ஊரக பகுதிகளாக அறியப்பட்ட 5 பகுதிகளில் 334 எண்ணிக்கையிலான பறவைகளும் வனப்பகுதிகளாக தேர்ந்தெடுத்த பகுதிகளில் 1552 எண்ணிக்கையிலான பறவைகளும் கணக்கிடப்பட்டுள்ளது. இக்கணகெடுப்பில் பல்வேறு அரிய வகை பறவைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. பறவைகள், வனவிலங்குகள் பாதுகாப்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு இக்கணக்கெடுப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என வனத்துறையின் தெரிவித்தனர்.

Related Stories: