துவரங்குறிச்சி அருகே பரபரப்பு தனியார் பஸ் ‘போதை’ கண்டக்டர், அதிவேக டிரைவருக்கு அபராதம்

துவரங்குறிச்சி: துவரங்குறிச்சி அருகே தனியார் பஸ் ‘போதை‘ கண்டக்டர், மற்றும் டிரைவருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் நவாசுதின் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது மணப்பாறையில் இருந்து துவரங்குறிச்சி நோக்கி சென்ற சென்ற தனியார் பஸ் சுமார் 50 பயணிகளுடன் அதிவேகமாக வந்தது. இதில் சந்தேகம் அடைந்த ஆய்வாளர் நவாசுதின், தனியார் பஸ் டிரைவர் ஜலீல் அகமது, மற்றும் கண்டக்டர்செந்தில்குமார் ஆகியோரை மது சோதனை செய்யும் மானிட்டர் கொண்டு ஆய்வு செய்தார். இதில் டிரைவர் மது அருந்தவில்லை என்றும் கண்டக்டர் மது அருந்தியுள்ளார் என்றும் உறுதியானது. இதைத்தொடர்ந்து பயணிகளின் நலன் கருதி அனைவரும் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து வாகனம் புத்தாநத்தம் ேபாலீஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. மேலும் டிரைவர் மற்றும் கண்டக்டர் இருவருக்கும் சம்பவ இடத்திலேயே ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பஸ்சை இருவரும் இயக்கக்கூடாது என்றும் கூறி மாற்று டிரைவர், கண்டக்டர் வரவழைக்கப்பட்டு பஸ் திருப்பி அனுப்பப்பட்டது.

Related Stories: