சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல் கரூர் அறுவடை வயலில் இரை தேடும் பறவைகள் முள்ளிப்பாடி அரசு நடுநிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடும் நிகழ்ச்சி

தோகைமலை: கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள முள்ளிப்பாடி அரசு நடுநிலைப் பள்ளியில் 1 முதல் 3 வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கான எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் நிகழ்ச்சிகள் நடந்தது. தமிழ்நாடு அரசு வழிகாட்டுதல் படி மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவை அடுத்து கரூர் மாவட்டத்தில் புதிய திட்டமான எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம் என்ற திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. 1 முதல் 3ம் வகுப்பு பயிலும் குழந்தைகளுக்கு அடிப்படைக் கற்றலை வலுப்படுத்தி, கல்வியில் தேய்வு இல்லாமல் கொண்டு செல்லும் நோக்கில் தமிழ்நாடு அரசு சிறப்பு கவனம் செலுத்தி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக முள்ளிப்பாடி ஊராட்சி முள்ளிப்பாடியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 1 முதல் 3 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கான எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் புஷ்பராணி தலைமை வகித்தார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். இதில் 1 முதல் 3 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு நிலை அடிப்படையிலான கற்பித்தல், எழுத்து வாசிப்பு, எண்ணறிவை செயல்வழியாகக் கற்றல், எண்ணையும் எழுத்தையும் ஆடிப்பாடிக் கற்கும் திட்டம், அசத்தலான என் மேடை என் பேச்சு திட்டம், பயமில்லாமல் திறமைகளை வெளிப்படுத்தும் திட்டங்களை மாணவர்களோடு ஆசிரியர்களும் கொண்டாடினர்.

இதில் தமிழ், அங்கிலம், கணிதம் ஆகியவற்றில் மாணவ மாணவியர்கள் கற்றுக்கொண்டதில் பல வகையான செயல்பாடுகள் மூலம் தங்களது பெற்றோர்களுக்கு செய்து காண்பித்தனர். இதேபோல் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைத்து பெற்றொர்களும், தங்களது செயல்பாடுகளை செய்து காண்பித்து அனைவரும் மகிழ்ச்சி பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவியர்கள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர்கழக நிர்வாகிகள் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: