கரூர் கலெக்டர் அலுவலகம் அருகே பேரூராட்சி ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

கரூர்: கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் குமரவேல் தலைமை வகித்தார். அனைத்து நிர்வாகிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீர் திட்ட பராமரிப்பு, தூய்மை பணி தனியார் வசம் ஒப்படைப்பு அரசாணை 139ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன போன்ற 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதே போல், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே கோரிக்கை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகி பொன் ஜெயராம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட தலைவர் சுப்ரமணியன் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர். பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு எந்தவிதமான திட்டங்களை அறிவிக்காத செயலை கண்டித்து இந்த அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: