உலக வனநாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: மேயர் தொடங்கி வைத்தார்

திருப்பூர்:  உலக வன நாள் மற்றும் தண்ணீர் சிக்கன நாளை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக, திருப்பூர் மண்ணரை பகுதியில் உள்ள மூளிக்குளத்தில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.  இதில் நீர்நிலைகளை பாதுகாப்பது மற்றும் அதனால் ஏற்படும் பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான நிகழ்ச்சியை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், கவுன்சிலர்கள் பி.ஆர்.செந்தில்குமார், தமிழ்செல்வி மற்றும் வட்ட செயலாளர் ஸ்டார் மணி, பத்திரன், இளங்கோ மற்றும் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மூளிக்குளத்தை சுத்தம் செய்து மரக்கன்றுகளையும் மேயர் தினேஷ்குமார், கமிஷனர் பவன்குமார் நட்டு வைத்தனர்.

Related Stories: