பால் மட்டும் அருந்தி உயிர் வாழும் மாற்றுத்திறனாளிக்கு உதவிய முதல்வர்

பல்லடம், மார்ச் 21: பல்லடத்தில்  பால் மட்டும் அருந்தி உயிர் வாழும் மாற்றுத்திறனாளியின் வாழ்வாதாரத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உதவியுள்ளார். மேற்கு பல்லடத்தில் வசிக்கும் வசந்த்குமார் (42) என்பவர் டீ மாஸ்ராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி தேவி (36) ஆகியோரின் மகன் அபினேஷ் (20) உடல் வளர்ச்சி இன்றியும், காதும் இல்லாமலும் வாய் பேச முடியாமலும் பெற்றோர் பராமரிப்பில் உள்ளார். மேலும் இவர் உடல் பிரச்னை காரணமாக பால் உள்ளிட்ட திரவ உணவுகளை மட்டுமே அருந்துகிறார். இவருக்கு உணவிற்காக தினசரி 3 லிட்டர் பால் தேவைப்படுகிறது. அபினேஷ் மற்றும் அவரது தந்தை வசந்த்குமார் ஆகியோர் சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அவரது உத்தரவின் பேரில் பால் வளத்துறை அமைச்சர் நாசர் பல்லடத்தில் பெட்டி கடை வைத்து அதில் ஆவின் பாலகம் அமைத்து கொள்ள ஏற்பாடு செய்தார். இது சம்பந்தமாக வசந்த்குமார் பல்லடம் நகர திமுக செயலாளர் ராஜேந்திரகுமாரை அணுகி உதவுமாறு கோரினார். அதைத்தொடர்ந்து கொசவம்பாளையம் சாலையில் இடம் ஒதுக்கீடு செய்து நகராட்சி ஆணையாளர் விநாயகம் உத்தரவிட்டார். இந்நிலையில் அபினேஷ்-க்கு இந்தியன் ஒவர்சீஸ் வங்கி பல்லடம் கிளை மானியத்துடன் கூடிய ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கடனுதவியை வழங்கியது. தற்போது பெட்டிக்கடை அமைக்கும் பணியும், அதற்கு மின் இணைப்பு பெறும் பணியும் நடைபெற்று வருகிறது.

Related Stories: