பால் கம்பம் நடும் விழா

தேன்கனிக்கோட்டை: பேட்டராயசுவாமி கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு பால் கம்பம் நடும் விழா நடைபெற்றது.  தேன்கனிக்கோட்டை பேட்டராய சுவாமி கோயில் தேர்திருவிழா, வரும் 22ம் தேதி யுகாதியன்று துவங்கி, ஏப்ரல் 3,4,5 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. தொடர்ந்து 3ம் தேதி இரவு ராமபாணம் நிகழ்ச்சி, 4ம் தேதி காலை 10.45 மணி அளவில் தேர் திருவிழா, 5ம் தேதி காலை 8 மணி அளிவில் எருது விடும் விழா, இரவு பல்லக்கு உற்சவம், வானவேடிக்கை நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக தேர் கட்டும் பணிகள் மற்றும் எருது விடும் விழாவிற்கு பால்கம்பம் நடும் விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக பேட்டராயசுவாமி உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அர்சகர்கள் பால்கம்பம் நட்டு பூஜை செய்தனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவரும் விழா குழு தலைவர் சீனிவாசன், அதிமுக பேரூர் செயலாளர் ஜெயராமன், முன்னாள் தலைவர் நாகேஷ், பன்னீர் செல்வம், ராமன், பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: