இலவச மருத்துவ முகாம்

ஓசூர்: ஓசூரில் முதல்வரின் பிறந்த நாளையொட்டி, இலவச மருத்துவ முகாம் நடந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஓசூர் மாநகர ஜூஜுவாடி வார்டு- 1ல் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. சந்திரசேகரா மருத்துவமனை நடத்திய இலவச இருதய பரிசோதனை மருத்துவ முகாமினை, மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ, மேயர் சத்யா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ஆனந்தய்யா, மண்டலத் தலைவர் ரவி, கருணாநிதி, வார்டு செயலாளர் வடிவேலு மற்றும் நிர்வாகிகள் 2வது வார்டு செயலாளர் வித்யாசாகர், தகவல் தொழில்நுட்ப அணி கலைவாணன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: