கடவூர் அருகே மில் தொழிலாளி மாயம்

தோகைமலை: கரூர் மாவட்டம், கடவூர் அருகே பாலவிடுதி காவல்சரகம் கடவூர் ஊராட்சி டி.இடையபட்டி பகுதி தேக்கமலை கோவில்பட்டியை சேர்ந்த மாணிக்கம் மகள் இளஞ்சியம் (21). இவர் அரவக்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்றவர் இரவு வெகுநேரம் ஆகியும் இளஞ்சியம் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த இளஞ்சியத்தின் பெற்றோர்கள் தங்களது உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் மாயமான இளஞ்சியம் கிடைக்கவில்லை. இதனால் இளஞ்சியத்தின் தந்தை மாணிக்கம் பாலவிடுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான இளஞ்சியத்தை தேடி வருகின்றனர்.

Related Stories: