சாலை விபத்தில் 2 பேர் பலி

க.பரமத்தி: கரூர் மாவட்டத்தில் ெவவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். கரூர் மாவட்டம், க.பரமத்தி அடுத்த தென்னிலை அருகே குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் கருப்பண்ணன் (33). இவர் சொந்த வேலையாக தனது ஊரில் நடந்து வந்தபோது எதிர்பாரதவிதமாக தானே நிலை தடுமாறி கிழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த இவரது உறவினர்கள் கருப்பண்ணனை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்து குறித்து தென்னிலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த கே.பேட்டை குடித்தெருவை சேர்ந்த பாக்கியம் (71). இவர் நேற்று முன்தினம் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் குறுக்கே நடந்து செல்லும்போது, கரூர், காந்திகிராமம் பகுதியை சேர்ந்த ஒருவர் ஓட்டி வந்த பைக் எதிர்பாராத விதமாக மூதாட்டி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூதாட்டி பாக்கியம் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இவரது உடல் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து அவரது மகன் பெரியசாமி கொடுத்த புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: