இருதரப்பினர் இடையே மோதல்- 8 பேர் கைது

கிருஷ்ணகிரி, மார்ச் 19: அண்ணிக்கு வேறு ஒருவருடன் உறவு ஏற்பட்டதில், இருதரப்பினர் இடையே மோதலில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி அடுத்த பெத்ததாளப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (23). டீ கடை வைத்துள்ளார். இவரது அண்ணன் பெருமாள் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். அவரது மனைவி கோமதி(39) பாஸ்ட் புட் கடை நடத்தி வருகிறார். இதனிடையே, கோமதிக்கும் சின்னமேலுப்பள்ளி தாடிக்காரன் கொட்டாயைச் சேர்ந்த விஜி என்பவருக்கும் உறவு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த சக்திவேல், விஜியை கண்டித்துள்ளார். இதனால் ஆவேசமடைந்த விஜி, குறிஞ்சிப்பட்டியை சேர்ந்த சாந்தகுமார், சக்திவேல் (24), சின்னமேலுப்பள்ளி லட்சுமணன், ராமன் (38), கோமதி (39), தினேஷ்(30) ஆகியோருடன் சேர்ந்து, சக்திவேலிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது சக்திவேலை விஜி தரப்பினர் கொடூரமான ஆயுதங்களாலும் கையாலும் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

இதுகுறித்து சக்திவேல் அளித்த புகாரின்பேரில், தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து சாந்தகுமார், விஜி, சக்திவேல், ராமன், கோமதி ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள லட்சுமணன், தினேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர். இதேபோல், மற்றொரு தரப்பில் சாந்தகுமார் என்பவர் புகார் அளித்தார். அதில், பெருமாள் பெயரில் பாஸ்ட் புட் கடை நடத்தி வருகிறோம். அவர் பெயரில் கடை நடத்தி வருவதால் ஆவேசமடைந்த சக்திவேல் மற்றும் முனியம்மாள், பெருமாள், வீரமணி, சாந்தி, கலைவாணி ஆகியோர் தங்களை தாக்கியதாக தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேல், முனியம்மாள், பெருமாள் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வீரமணி, சாந்தி, கலைவாணி ஆகியோரை தேடி வருகின்றனர்.

Related Stories: