மலையாண்டிபட்டியில் புதிய பகுதி நேர ரேஷன் கடை திறப்பு

கிருஷ்ணராயபுரம், மார்ச் 19: கிருஷ்ணராயபுரம் வட்டம், பாப்பக்காபட்டி ஊராட்சி அயன்சிவாயம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பாப்பக்காபட்டி முழு நேர ரேஷன் கடை செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் மலையாண்டிபட்டி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்கப்பட்டு, மலையாண்டிபட்டியில் புதிய பகுதி நேர ரேஷன் கடையை குளித்தலை எம்எல்ஏ இரா.மாணிக்கம் திறந்து வைத்தார். கரூர் மண்டல இணைப்பதிவாளர் க.கந்தராஜா முன்னிலை வகித்தார்.

விழாவில் குளித்தலை சரக துணைப்பதிவாளர் கே.எம்.ஆறுமுகம், கள அலுவலர் ரமேஷ், பொது விநியோகத்திட்ட கூட்டுறவு சார் பதிவாளர் ர.கனிமொழி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அடிதட்டு மக்கள் பாதிக்கும் வகையில் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு (சிலிண்டர் காஸ்) விலை பல மடங்கு அதிகரித்து உள்ளதோடு தொடர்ந்து விலையேற்றம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலையும் பலமடங்கு அதிகரித்துவிட்டது. இதையடுத்து வரும் ஏப்ரல் மாதம் 5ம் தேதி அன்று டெல்லியில் உள்ள பாராளும்மன்றத்தை நோக்கி சுமார் 10 லட்சம் பேருடன் பேரணியாக செல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Related Stories: