செங்குணம் ஊராட்சியில் கிராம வளர்ச்சித் திட்ட சிறப்பு கிராம சபை கூட்டம்

பெரம்பலூர்: செங்குணம் ஊராட்சியில் கிராம வளர்ச்சித் திட்டம் மற்றும் அந்தோதயா கணக்கெடு ப்பு குறித்த சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர், வேப்பூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றிய ங்களில் 121 கிராம ஊராட் சிகள் உள்ளன.பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் உத்திரவின்படி, மாவட்டத் தில் உள்ள 4 ஒன்றியங்க ளில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அந்தந்த ஊ ராட்சி மன்றத் தலைவர் தலைவர் தலைமையில் கிராம வளர்ச்சி திட்டம் மற் றும் அந்தோதயா கணக்கெடுப்பு சம்மந்தமாக சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதன்படி பெரம்பலூர் ஒன்றியம் செங்குணம் ஊராட் சிமன்ற அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா கண்ணுச்சாமி தலைமையில், துணைத் தலைவர் மணிவேல் முன் னிலையில் கிராம வளர்ச்சி திட்டம் மற்றும் அந்தோதயா கணக்கெடுப்பு சம்மந்தமாக கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களி டம் அந்தோதயா கணக்கெ டுப்பு மற்றும் கிராம வளர்ச்சி குறித்த தேவைகளை கேட்டறிந்து தீர்மான நோட்டில் பதிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் கோவிந்தன், வார்டு உறுப்பினர்கள் செங்குணம் நல்லம்மாள், அனிதா, ராஜாக்கண்ணு, அஞ்சலை, நிர்மலா, அருமடல் சுசிலா, சுப்ரமணியன், பாலாம்பாடி திருமூர்த்தி, கிராம வறுமை ஒழிப்புத் சங்க கணக்காளர் கெஜ லெட்சுமி, மகளிர் திட்ட சரண்யா உட்பட செங்குணம், அருமடல், பாலாம்பாடி, சறுக்குபாலம் பகுதி கிராமப் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: