வத்தலக்குண்டு அருகே விவசாயிகளுக்கு பஞ்சகாவியா பற்றி நேரடி பயிற்சி

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே செக்காபட்டியில் வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு பஞ்சகாவியா பற்றி நேரடி பயிற்சி அளித்தனர். வேடசந்தூர் எஸ்ஆர்எஸ் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ், வத்தலக்குண்டு பகுதியில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பதுடன், அவர்களிடமிருந்து சில பயிற்சிகளையும் பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் வேளாண் கல்லூரி மாணவிகள் செக்கபட்டியில் பஞ்சகாவியா மற்றும் தசகாவியா எவ்வாறு செய்வது என்பது பற்றியும், அவற்றின் பயன்பாடு பற்றியும் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர். இந்நிகழ்ச்சியில் வேளாண் கல்லூரி மாணவிகள் அஞ்சு, ஆர்யா, இலக்கியா, கோமதி, கவுசலிகா, ஜோனோபார்க், டயனாம்பிகா, காவிய தர்ஷினி, கேசிகா ஆகியோர் கலந்துகொண்டனர். விவசாயிகள் வேளாண் அதிகாரிகளுக்கும், வேளாண் கல்லூரி மாணவிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்

Related Stories: