கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க வேலை நிறுத்த விளக்க கூட்டம்

கரூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் கரூர் கோட்டம் சார்பில் வேலை நிறுத்த விளக்க கூட்டம் நடைபெற்றது. கரூர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த விளக்க கூட்டத்திற்கு மாநில செயலாளர் பாஸ்கரன், திருச்சி மண்டல செயலாளர் சாமிநாதன், தலைமை ஆலோசனைக்குழு நிர்வாகி முத்துச்சாமி, தலைமை ஆலோசகர் ஜான் பிரிட்டோ ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்த கூட்டத்தில், கரூர் நிர்வாகிகள் வடிவேல், சுந்தரம், கருணாநிதி உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

மூத்த ஜிடிஎஸ் ஊழியர்களுக்கு 12, 24, 36 வருட மூன்று கட்ட ஊதிய உயர்வு வழங்க வேண்டும். குரூப் இன்சூரன்ஸ் தொகையை 5லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும், பென்சன் வழங்க வேண்டும். ஊழியர்கள் விடுப்பு எடுத்தால் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த விளக்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கோவகுளம் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டு வந்துள்ள நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 15 நாட்களில் சுமார் 6000 க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: