அரியலூர் சிமெண்ட் ஆலையில் 52வது தேசிய பாதுகாப்பு வார நிறைவு விழா

திருச்சி: அரியலூர் மாவட்டம் கோவிந்தபுரம் ராம்கோ சிமெண்ட் ஆலையில் 52வது தேசிய பாதுகாப்பு வார விழாவின் இந்தாண்டு கருத்துருவான தீங்கற்ற பணியிடமே நமது குறிக்கோள் என்ற தலைப்பின் கீழ் கடந்த 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை ஆலை வளாகத்தில் பாதுகாப்பு கொடி தினமும் காலை துறைத்தலைவர்களால் ஏற்றி வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பாதுகாப்பு வாரவிழாவின் நிறைவு விழா நேற்று ராம்கோ மனமகிழ் மன்றத்தில் நடந்தது. தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையின் கூடுதல் இயக்குநர் சித்தார்த்தன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். இணை இயக்குநர் மாலதி மற்றும் துணை இயக்குநர் சுசிலா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு வார விழா போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், ஐடிஐ மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் குடும்பத்தினர் ஆகியோருக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.  விழாவில் தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்த நாடகம் மற்றும் கருத்துக்கள் மற்றம் பாதுகாப்பு பற்றிய பாடல்களை மனிதவளத்துறை ராஜமுருகன் மற்றும் முகுந்தன் ஆகியோர் பாடினர்.  முன்னதாக ஆலையின் தலைவர் மதுசூதனன், மனிதவளத்துறை மூத்த பொதுமேலாளர் ராமராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக ஆலையின் மின்னியல்துறை இதயசந்திரன் வரவேற்றார். ஆலையின் பாதுகாப்புத்துறை அதிகாரி முருகராஜ் பாதுகாப்பு அறிக்கை வாசித்தார்.  முடிவில் இயந்திரவியல் துறையை சேர்ந்த குழந்தைஇயேசு நன்றி கூறினார்.

Related Stories: