கரூர்: கரூரில் சிறுமி பலாத்கார வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கரூர் வெங்கமேட்டைச் சேர்ந்த பெற்றோரால் கைவிடப்பட்ட 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கடந்த டிசம்பர் மாதம் 18ம் தேதி கரூர் வ.உ.சி. தெருவைச் சேர்ந்த சதீஸ்குமார் (32), கரூர் தொழிற்பேட்டையைச் சேர்ந்த மதன் (32) மற்றும் வடக்குகாந்திகிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (34) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்நிலையில் இவர்கள் 3 பேர்கள் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதால் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சுந்தரவதனம், மாவட்ட கலெக்டர் பிரபு சங்கருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் 3 பேரும் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
