புதுவை மசாஜ் சென்டரில் விபசாரம் உரிமையாளர் அதிரடி கைது

புதுச்சேரி, மார்ச் 10: புதுச்சேரி, லால்பகதூர் சாஸ்திரி வீதியில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் விபசாரம் நடப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஒதியஞ்சாலை போலீசார் நேற்று முன்தினம் மாலை திடீரென புகுந்து சோதனை நடத்தினர். அங்கு நாகலாந்து, அசாம் உள்ளிட்ட வடமாநில அழகிகள் அமர்ந்திருந்த நிலையில் விபசார தொழில் நடப்பது உறுதிசெய்யப்பட்டது. மசாஜ் பெயரில் விபசார தொழிலை நடத்திய உரிமையாளரான புதுச்சேரி, கோவிந்தசாலை, சுப்பிரமணிய சிவா வீதியைச் சேர்ந்த புருஷோத்குமார் (36) என்பவரையும், அங்கு வாடிக்கையாளர் பெரியசாமி (27) என்ற வாலிபரையும் சுற்றிவளைத்தனர்.

மேலும் அங்கு விபசார தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட நாகலாந்து, அசாம் மாநில அழகிகள் 4 பேர் மட்டுமின்றி மசாஜ் சென்டர் உரிமையாளரான புருஷோத்குமாரின் மனைவி உள்ளிட்ட தானம்பாளையம், கணுவாப்பேட்டை, அரியாங்குப்பம் பழைய பூரணாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மேலும் 6 அழகிகள் மீட்கப்பட்டனர்.அங்கு மசாஜ் செய்வதற்கு புக்கிங் செய்திருந்த வாடிக்கையாளர்களின் பட்டியல் மட்டுமின்றி பதிவேடு புத்தகத்தையும் கைப்பற்றி பிடிபட்ட உரிமையாளர், வாடிக்கையாளர் மற்றும் 10 அழகிகளை ஒதியஞ்சாலை காவல் நிலையம் அழைத்து வந்தனர்.பின்னர் 10 அழகிகளையும் மகளிர் போலீசாரின் உதவியுடன் காப்பகங்களில் ஒப்படைத்த போலீசார், மசாஜ் சென்டரை நடத்திய உரிமையாளரான புருஷோத்குமாரை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: