மதுராந்தகம் நகராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

மதுராந்தகம். மார்ச் 9: மதுராந்தகம் நகராட்சியில் நடைபெற்று வரும் அரசின் பல்வேறு நலத்திட்ட பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். மதுராந்தகம் பஸ் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவறை, மீனாட்சி அம்மன் கோயில் தெருவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நடைபெறும் சாலை மேம்பாடு பணி, வெங்கடேஸ்வரா நகரில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் பூங்கா, காந்தி நகரில் உள்ள குளம் தூர்வாரும் பணி ஆகியவற்றை நேரில் பார்வையிட்டார்.   அப்போது, மதுராந்தகம் நகர மன்ற தலைவர் மலர்விழி குமார், மதுராந்தகம் ஆணையாளர் அருள், நகராட்சி பொறியாளர் கொளரி, வட்டாட்சியர் ராஜேஷ், நகராட்சி பணி மேற்பார்வையாளர் பாஸ்கர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், ‘அதிகாரிகளிடம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதேவேளையில் அனைத்து பணிகளும் தரமான முறையில் நடைபெற வேண்டும்’ என அறிவுரை வழங்கினார்.

Related Stories: