விவசாயிகள் மகிழ்ச்சி கரூர் நகரில் போக்குவரத்து இடையூறாக பள்ளம்

கரூர்: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கூத்தரிசிக் காரத் தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பள்ளத்தை விரைந்து சரி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஜவஹர் பஜார் பகுதியை ஒட்டி கூத்தரிசிக்காரத் தெரு உள்ளது. இந்த தெருவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இந்த சாலையின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த பகுதியில் குடிநீர் குழாய் சீரமைப்புக்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பணிகள் முடிவடைந்த நிலையில் பள்ளம் மூடப்படாத காரணத்தினால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, தோண்டப்பட்ட பள்ளத்தை விரைந்து மூட வேண்டும் எனவும் அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் திறந்த நிலையில் உள்ள இந்த பள்ளத்தை விரைந்து மூடி எளிதான போக்குவரத்து நடைபெற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், பேரணிகள் நடத்தி பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனால் வரும் காலங்களில் கிராமப்புற நகர்புறங்களில் இருந்து ஏராளமான பள்ளி குழந்தைகள் அரசு பள்ளியில் சேர்க்கும் நிலை ஏற்படும். இதனால் அரசு பள்ளியின் தரமும் உயரும் கல்வியின் தரமும் உயரும்.

Related Stories: