பல்லடத்தில் நாளை அக்குபஞ்சர் இலவச மருத்துவ முகாம்

பல்லடம், மார்ச் 7: பல்லடத்தில் நாளை (8ம் தேதி) அக்குபஞ்சர் இலவச மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.  பல்லடம் அனைத்து வணிகர்கள் சங்கம், பல்லடம் ரோட்டரி ரெயின்போ, இமைகள் கண்  தான கழகம் ஆகியவை சார்பில்  உலக மகளிர் தினத்தையொட்டி மை பல்லடம் பச்சாபாளையம் பொன்னி மருத்துவமனை அருகில் உள்ள மந்த்ரா  இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கிளினிகில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி  வரை இலவச மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.இம்முகாமில் அக்குபஞ்சர்,  அக்குபிரசர்,கப்பிங் தெரப்பி,பிசியோதெரப்பி, மூலிகை மருத்துவம், உணவு முறை  ஆலோசனை, யோகா பயிற்சி உள்ளிட்டவை அளிக்கப்படுகிறது.

Related Stories: