தொட்டியம்: தா.பேட்டை அருகே , தலைமையாசிரியரை மிரட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் பாப்பபட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. நேற்று இந்த பள்ளியில் செய்முறை தேர்வு நடந்து கொண்டிருந்தது. அப்போது ஜடமங்கலத்தை சேர்ந்த முகேஷ்(22), ரகுபதி(24) ஆகிய இருவரும் பள்ளி வளாகத்தில் கூச்சலிட்டு கொண்டு டூவீலரில் அதிக ஒலி எழுப்பி பள்ளியில் வளாக பகுதியில் சுற்றி வந்துள்ளனர். அப்போது மாணவிகளை அழைத்துச் செல்ல வந்த பெற்றோர்கள் தட்டிக் கேட்டதற்கு அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர்.
