திருச்சி விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.35லட்சம் மதிப்பு கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து நேற்றுஇரவு இண்டிகோ விமானம் வந்து சேர்ந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை விமான நிலையத்தின் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் ஆண் பயணி ஒருவருக்கு சொந்தமான சூட்கேஸில் 629 கிராம் எடையிலான தங்க செயின்களை மறைத்து கொண்டு வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.35 லட்சத்து 23 ஆயிரம் என அதிகாரிகளால் மதிப்பிடப்பட்டது.

ஆங்காங்கே குடிநீர் வசதி அமைக்க வேண்டும்.எஸ்.கண்ணனூர் பேரூராட்சி சார்பில் பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே சின்டெக்ஸ் டேங்க் குழாய் அமைத்து குடிநீர் வசதி செய்து தரவேண்டும். ஆண்கள், பெண்கள் என தனித்தனியே தற்காலிக கூடுதல் கழிப்பறை மற்றும் குளியலறை வசதிகள் அமைத்து தர வேண்டும். காவல்துறையுடன் இணைந்து, பிளாஸ்டிக்கை பயன்படுத்தி தண்ணீர் பாக்கெட்டுகள், சுகாதாரமற்ற உணவு பொருள்கள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். குப்பைகளை உடனுக்குடன் அகற்றிட சுகாதாரப் பணியாளர்களை கூடுதல் அளவில் நியமனம் செய்து சுகாதாரப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். கோயில் சிறப்பு பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.

Related Stories: