தொழில் நுட்பம் செய்முறை தேர்வு வட மாநிலங்களில் திருப்பூரின் உண்மை நிலவரத்தை தெரியப்படுத்த வேண்டும்

திருப்பூர், மார்ச் 4: கோவை திருப்பூர் மாவட்ட ஜவுளி தொழில் முனைவோர் சங்கத்தினர்,  திருப்பூர் மாவட்ட கலெக்டர்  வினீத் மற்றும் சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், போலீஸ் சூப்பிரண்டு  சசாங் சாய், திருப்பூர் மாநகர துணை கமிஷனர் அபிஷேக் குப்தா ஆகியோரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், பாதுகாப்பின்றி இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால் வட மாநில தொழிலாளர்கள் பலர் அச்சமடைந்து  சொந்த ஊருக்கு செல்கின்றனர் எனவும் சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. எனவே தொழிலாளர்களிடம் இருக்கும் அச்சத்தை போக்கும் வகையிலும், வட மாநிலங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு திருப்பூரின் உண்மை நிலை குறித்து தெரிவிக்கும் வகையில், தொழிலாளர்கள் பாதுகாப்புடன் எந்த ஒரு பிரச்சனையின்றியும் இருக்கின்றனர் என்றும், தற்போது பரவிக் கொண்டிருக்கும் செய்தி முற்றிலும் தவறானது என்றும் வதந்திக்காக பரப்பப்பட்டது என்றும், ஒடிசா, பீகார், ஜார்கண்ட், உத்தர பிரதேசம் மற்றும் வேறு பல தொழிலாளர்கள் வருகை புரியும் வெளி மாநிலங்களுக்கு உடனடியாக தகவல் அனுப்பி அங்கே உள்ள செய்தித்தாள்களில் அதை விளம்பரப்படுத்தி இங்குள்ள உண்மை நிலவரத்தை தெரியப்படுத்த வேண்டும். மேலும் அரசாங்க அலுவலர்கள் இந்த வதந்தி சம்பந்தமாக ஒரு குறுஞ்செய்தி படத்தை வெளியிடும்படியும் கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: