செருமாவிலங்கை பஜன்கோ வேளாண் கல்லூரியில் மாணவர் மன்ற துவக்கம்

காரைக்கால்: காரைக்கால் அடுத்த செருமாவிலங்கையில் பண்டித ஜவகர்லால் நேரு அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது. இக்கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்கள் காரைக்கால் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சமூக நல பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கல்லூரி வளாகத்தில் புதிதாக அமையப்பெற்ற திறந்தவெளி கலையரங்கத்தில் மாணவர் மன்ற துவக்க விழா 2023 தொடங்கியது. விழாவின் சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் வெங்கடேச பழனிசாமி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் பஜன்கோ கல்லூரி முதல்வர் புஷ்பராஜ், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய கோயம்புத்தூர் வேளாண் கல்லூரி முதல்வர் வெங்கடேச பழனிசாமி, மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மாணவ மாணவிகள் அனைவரும் கற்றலோடு நின்று விடாமல், கல்லூரிகளுக்கு இடையே நடைபெறும் விளையாட்டுப் போட்டி, முத்தமிழ் விழா, கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் பங்கு பெறும்போது அவர்களின் தெளிவான திட்டமிடல், ஒருங்கிணைப்பு, தலைமை பண்பு, நிர்வாக தரம் மேம்படுவதோடு மட்டுமல்லாமல் மாணவர்களே நல்ல நட்புறவும் மேலாண்மை பண்பும் ஓங்கி வளரும் என கூறினார்.

Related Stories: