பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக வீர ராகவ பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை

திருப்பூர், பிப். 27: திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்2 மற்றும் பிளஸ்1, 10ம் வகுப்பு ஆகிய பொதுத்தேர்வுகள் அடுத்த மாதம் முதல் தொடங்குகிறது. தேர்வுக்கான அட்டவணையும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட கல்வித்துறை சார்பில் பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. பள்ளிகளில் தேர்வுகளை கண்காணிக்க, கண்காணிப்பாளர் மற்றும் பறக்கும்படை அதிகாரிகள் வரை அனைவரும் நியமிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.

இதுபோல் வினாத்தாள்களும் வந்த நிலையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுகிற மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெற வேண்டியும், நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டியும் திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: