ரோந்து பணியை தீவிரப்படுத்த கோரிக்கை திருப்பூர் மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் முகாம்

திருப்பூர்,பிப்.26: திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் 2022-2023-ம் நிதி ஆண்டில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்மையினர்களுக்கு சுமார் ரூ.1.56 கோடி அளவில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, பல்வேறு கடன்கள் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் ஆகிய திட்டங்களின் கீழ், கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம். இந்த திட்டங்களுக்கான கடன் வழங்கும் முகாம் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறுகிறது.

அதன்படி திருப்பூர் வடக்கு வட்டத்திற்கு நகர கூட்டுறவு வங்கியில் வருகிற 6ம் தேதி காலை 10.30 மணிக்கும், திருப்பூர் தெற்கு வட்டத்திற்கு பொங்கலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வருகிற 6ம் தேதி காலை 10.30 மணிக்கும், அவினாசி வட்டத்திற்கு ராக்கியாபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வருகிற 6ம் தேதி காலையும், ஊத்துக்குளி வட்டத்திற்கு ஊத்துக்குளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வருகிற 7ம் தேதி காலையும், பல்லடம் வட்டத்திற்கு கரடிவாவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வருகிற 7ம் தேதி காலையும், காங்கேயம் வட்டத்திற்கு எஜமானூர்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் வருகிற 7ம் தேதி காலையும், தாராபுரம் வட்டத்திற்கு தாராபுரம் நகர கூட்டுறவு வங்கியில் வருகிற 8ம் தேதி காலையும், உடுமலை வட்டத்திற்கு உடுமலை நகர கூட்டுறவு வங்கியில் வருகிற 8ம் தேதி காலையும், மடத்துக்குளம் வட்டத்திற்கு காரத்தொழுவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வருகிற 8ம் தேதி காலையும் நடைபெறுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர் புறமாயின் திட்டம் 1-ன் கீழ் ரூ.1.20 லட்சத்திற்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இதில் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும், அதிக கடனாக ரூ.20 லட்சமும், திட்டம் 2-ன் கீழ் ஆண்டுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30 லட்சம் வழங்கப்படுகிறது.

கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. சுயஉதவிக்குழு கடன் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் ஆண்டிற்கு 7 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதமும், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் ஒருவருக்கு ரூ.1.50 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. இதுபோல் சிறுபான்மையின மாணவ-மாணவிகள், இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி பயில்கிற மாணவ-மாணவிகளுக்கு கடனுதவிகள் வழங்கப்படுகிறது. எனவே இந்த திட்டத்தில் சிறுபான்மையினர் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும், இது தொடர்பான விவரங்களை 0421-2999130 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: