சிறைச்சாலை வாசலில் சாலை விரிவாக்கபணி திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டபணிகள் செயலாக்கம் குறித்து ஆய்வு கூட்டம்

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் செயலாக்கம் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன் தலைமையில், கலெக்டர் பிரதீப்குமார் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்றது \ அதனைத் தொடர்ந்து, திருச்சி மாநகராட்சி, கல்லுக்குழி அங்கன்வாடி மையத்தை நேரில் பார்வையிட்டு குழந்தைகளின் வளர்ச்சி, எடை மற்றும் உயரம் ஆகியவற்றை கண்காணித்து குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு முறைகள் மற்றும் கற்பிக்கப்படும் முன்பருவ கல்வி முறைகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்து, குழந்தைகளிடம் கலந்துரையாடினார் மேலும், ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கி ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து குழந்தைகளின் தாய்மார்களுக்கு எடுத்துரைத்தார் பின்னர், திருச்சி மாநகராட்சி, அரியமங்கலம் கோட்டம், மாநகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை பார்வையிட்டு மாணவர்களிடம் கலந்துரையாடி, பள்ளியில் செயல்படுத்தப்படும் எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்தும், இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள கற்றல் மேம்பாடு குறித்து கேட்டறிந்தார்

மேலும், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம், வாளவந்தான்கோட்டையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 30 புதிய வீடுகள் கட்டும் பணிகள் மற்றும் நவல்பட்டு ஊராட்சியில், சமத்துவபுரத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமானப் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் இதனைத் தொடர்ந்து, பூலாங்குடி காலனி, துணை சுகாதார நிலையத்தின் செயல்பாடுகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சுகாதார தன்னார்வலர்களிடம் கிராமத்தில் சிகிச்சை பெறும் பயனாளிகள் விபரம் குறித்து கேட்டறிந்து, ரத்த அழுத்தம், சக்கரை நோய்க்கான தொடர் சிகிச்சைகளை கண்காணிக்க வேண்டுமென அறிவுறுத்தினார் இதனைத்தொடர்ந்து, நவல்பட்டு கிராமத்தில், பொதுப் பணித்துறையின் சார்பில், ரூ48 கோடி மதிப்பீட்டில் 4 தளத்துடன் புதிதாக கட்டப்பட்டு வரும் தகவல் தொழில் நுட்ப கட்டடத்தின் கட்டுமானப் பணிகளையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர், மாவட்ட கலெக்டர் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

இந்நிகழ்ச்சிகளில், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, மாவட்ட திட்ட அலுவலர் ரேணுகா, முதன்மைகல்வி அலுவலர் பாலமுரளி, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் சுப்ரமணியன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கங்காதாரணி, ஊரக வளர்ச்சித்துறை உதவித் திட்ட இயக்குநர் உமாசங்கர், பொதுப்பணித்துறை (கட்டிடம்) செயற்பொறியாளர் மணிவண்ணன், கண்காணிப்புப் பொறியாளர் வள்ளுவன், உதவி செயற்பொறியாளர் சாந்தி உள்ளிட்ட பொதுப்பணித்துறை அலுவலர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Related Stories: