பொதுமக்கள் சாலை மறியல் தேவூர் தேன்மொழியாள் உடனுறை தேவபுரீஸ்வரர் கோயிலில் மஹாலட்சுமி குபேர யாகம்

கீழ்வேளூர்: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தேவூர் தேன்மொழியாள் உடனுறை தேவபுரீஸ்வரர் கோயிலில் மஹாலெட்சுமி குபேர யாகம் நடைபெற்றது. திருச்சியை அடுத்த திருவனைகோவில் வனத்தில் சிவலிங்கம் வெட்ட வெளியில் மழை, வெயிலில் இருந்துள்ளது. அப்போது சிவன் மீது பக்திக் கொண்ட சிலந்தி தனது உமிழ் நீரால் பந்தல் அமைத்து வெயில் படாமல் செய்து வணங்கி வந்துள்ளது. அதேப்போல் சிவன் மீது பக்தி கொண்டு தினம் தோறும் யானை தும்பிக்கையில் தண்ணீர் கொண்டு வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்துள்ளது.

அப்போது சிலந்தியின் வலை தினம் தோறும் சேதம் ஏற்பட யானையின் மீது கோபம் கொண்டது. சிலந்தி யானையின் துதிக்கையில் நுழைந்ததால் யானை, சிலந்தி இரண்டும் இறந்துள்ளது. அப்போது சிவன் யானைக்கு மோட்சம் கொடுத்து சிலந்திக்கு மறு பிறவி கொடுத்துள்ளார். மறு பிறவியில் சிலந்தி கோட்செங்க சோழனாக பிறந்து யானை மீது மறு பிறவியிலும் கோபம் தீராமல் யானை சிவனை தரிசிக்க முடியாத அளவிற்கு சுமார் 10 அடி உயரத்திற்கு மேல் இடது பக்கம் படி வைத்து வலது பக்கம் சிவன் உள்ளது போல் தமிழகத்தில் 72 மாட கோயில்களை கட்டியுள்ளார். அதில் தேவூர் தேவபுரீஸ்வரர் கோயிலும் ஒன்றாகும். இந்த கோயிலில் கோயில் கட்டும் போது சுமார் 12 அடி உயரத்தில் வெள்வாழை என்று சொல்ல கூடிய கல்வாழை பல நூற்றாண்டு காலமாக வாழையடி வாழையாக வாழை மரம் இருந்து கொண்டு இறைவனுக்கு வாழை பழம் வழங்கும் இந்த வாழை மரம் கோயிலில் தலவிருச்சமாக உள்ளது. மேலும் குபேர மூர்த்தி கோயில் உள்ள சிவனை வணங்கி குரு குபேர பட்டத்தை பெற்ற குருஸ்தலமா தேவூர் தேவபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் மஹாலெட்சுமி குபேர மஹாயாகம் விநாயகர் பூஜையுடன் தொங்கி கலச பூஜை, நாமசங்கல்ப பூஜை, நவக்கிரஹ பூஜை, லெட்சுமிபூஜை, கோ பூஜை, குபேர பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மஹாலெட்சுமி குபேர மஹாயாகமும், வஸோத்தாரா ஹோமம் நடைபெற்று மஹாலெட்சுமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், உபயதாரர்கள், கிராமவாசிகள் செய்திருந்தனர்.

Related Stories: