கரூர், பிப்.21: கரூர் மாவட்டத்தில் உள்ள நேரடி கொள் முதல் நிலையங்கள், அரசு அரவை ஆலைகளில் நேற்று உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். கரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடியை தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் 13 நெல் கொள் முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 8 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.
நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடைபெறாத வகையில், அதனை தடுக்கும் வகையில், தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை திருச்சி மண்டல எஸ்பி சுஜாதா உத்தரவின்பேரில், தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையினர் கடந்த 11ம்தேதி சோதனை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, கருர் மாவட்டத்தில் உள்ள கல்லடை, நெய்தலூர், பொய்யாமணி ஆகிய பகுதிகளில் செயல்படும் அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள், உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது, அங்குள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியும், முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், அரசு அரவை மில்லிலும் இந்த குழுவினர் சோதனை நடத்தினர். மேலும் தமிழக அரசு, ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகை கயில் பொது விநியோக திட்டத்தில் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது. இதில், சிலர், கள்ளச்சந்தையில் விற்று லாபம் பார்ககும் நோக்கத்தில் செயல்படுகின்றனர். இவர்கள் பற்றியும், பொது விநியோக திட்ட பொருட்கள் பதுக்கல் மற்றும் கடத்தல் குறித்து பொதுமக்கள் எளிய முறையில் புகார் தெரிவிக்க 1800 599 5950 என்ற இலவச எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும், புகார் அளிப்பவர்களின் பெயர் ரகசியம் காக்கப்படும் எனவும், இதற்காக 24மணி நேரம் செயல்படும் காவல் கட்டுப்பாட்டு அ றை செயல்படுகிறது. இது சிவில் சப்ளை கூடுதல் டிஜிபியின் நேரடி கண்காணிப்பில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.தமிழக அரசு, ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகை கயில் பொது விநியோக திட்டத்தில் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது. இதில், சிலர், கள்ளச்சந்தையில் விற்று லாபம் பார்ககும் நோக்கத்தில் செயல்படுகின்றனர்.