கடுக்கலூர் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

செய்யூர், அக்.1: கடுக்கலூர் கிராமத்தில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. தமிழகம் முழுவதும் பருவநிலை மாற்றம் காரணமாக சற்று காய்ச்சல் அதிகரித்துள்ளது.  இதனால், காய்ச்சல் உள்ள பகுதிகளை கண்டறிந்து மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என சுகாதார துறை அறிவித்துள்ளது. இதனை அடுத்து, செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம் கடுக்கலூர் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ திட்ட மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு, ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். சித்தாமூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிற்றரசு முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் ரங்கசாமி அனைவரையும் வரவேற்றார்.

சித்தாமூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஏழுமலை கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில்,  ஏராளமான  கிராமமக்கள் கலந்து கொண்டு காய்ச்சல், இருமல், சளி, தலைவலி ஆகிய நோய்களுக்கு சிகிச்சை பெற்று மருந்து மாத்திரை இலவசமாக வாங்கிச் சென்றனர். காசநோய், கண் மருத்துவம், பல் மருத்துவம், சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்பட நோய்களுக்கு பரிசோதனை செய்து கொண்டனர். இந்த முகாமில் 500க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய குழு துணை பெரும் தலைவர் பிரேமா சங்கர், ஒன்றிய குழு உறுப்பினர் தமிழினி, ஊராட்சி மன்ற துணை தலைவர்  விஷ்ணு வந்தனா, மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.

Related Stories: