புழல் சிறையில் நன்னடத்தை காரணமாக 5 கைதிகள் விடுதலை

புழல், அக்.1: புழல் மத்திய சிறையில் நேற்று நன்னடத்தை பேரில் 5 கைதிகள் முன்கூட்டி விடுதலை செய்யப்பட்டனர். தமிழகத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் மற்றும் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அனைத்து மாவட்ட முக்கிய சிறைகளில் நன்னடத்தை பேரில் சிறைக் கைதிகள் தமிழக அரசின் உத்தரவின்பேரில் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். இதேபோல் சென்னை புழல் மத்திய சிறையில் கடந்த சனிக்கிழமை நன்னடத்தை பேரில் 2 பெண்கள் உள்பட மொத்தம் 15 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

இதையடுத்து, கடந்த 28ம் தேதி 2வது கட்டமாக ஒரு பெண் உள்பட 22 கைதிகள் முன்கூட்டி விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில், புழல் மத்திய சிறையில் நேற்று காலை நன்னடத்தை பேரில் 5 சிறைக் கைதிகள் விடுதல் செய்யப்பட்டனர். அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறை அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.

Related Stories: