புதுநகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு போட்டிகள்

கந்தர்வகோட்டை,அக்.1: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் புதுநகர் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழக அரசு அறிவித்துள்ள பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு போட்டி மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உத்தரவின்படியும், கந்தர்வகோட்டை தாசில்தார் ராஜேஸ்வரி வழிகாட்டுதலின் பேரில் வருவாய் ஆய்வாளர் செல்வ சக்தியா தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ- மாணவிகள் கலந்துகொண்டு கவிதை போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டிகள் என நடைபெற்றன. இதில் எண்ணற்ற மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு அவர்களது தனித்திறமையை எழுத்து மூலமும், பேச்சில் மூலமும், வரைதல் மூலமும் வெளிப்படுத்தினர். வெற்றியாளர்களை தேர்வு செய்வதில் தேர்வு குழுவினர் திணறினர். அந்த அளவிற்கு மாணவ -மாணவிகள் திறமையை வெளிக்காட்டி இருந்தனர். இறுதியில் வெற்றி பெற்ற மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். விழாவில் புதுநகர் ஊராட்சி மன்ற தலைவர் வினோதா முத்துகுமார், தலைமையாசிரியர் அண்ணாதுரை, கிராம நிர்வாக அலுவலர் அன்பரசன் மற்றும் மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: