அதிமுக தலைவர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தலைஞாயிறு ஒன்றியத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும்

வேதாரண்யம், அக். 1: தலைஞாயிறு ஒன்றியத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என விவசாய சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வேதாரண்யம் தாலுக்கா அருந்தவம்புலத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலைஞாயிறு ஒன்றிய பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரவை நிர்வாகிகள் பக்கீர்சாமி, முத்துரங்கன் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் சந்தானகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். விவசாய சங்க ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தார். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் சிவகுருபாண்டியன். விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாபுஜி. விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கட்சி நிர்வாகிகள் மகேந்திரன், வீராசாமி, ஜெயராமன், ராஜேந்திரன் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தலைஞாயிறு ஒன்றிய பகுதிகளில் சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்களை தட்டுப்பாடு இன்றி கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்க வேண்டும். தேவையான தண்ணீரை தொடர்ந்து வழங்க வழிகளை செய்திட வேண்டும் தலைஞர் ஒன்றியத்தில் குறுவை அறுவடை பணிகள் துவங்கி உள்ளதால், உடனே அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாய நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: