ஆயுஷ் பயன்பாடு குறித்த மாதிரி கணக்கெடுப்பு

நாகர்கோவில், அக்.1 : புள்ளி இயல் துணை இயக்குநர் அலுவலக செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பொது மக்களிடையே ஆயுஷ் (ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி) குறித்த விழிப்புணர்வு, அதன் பயன்பாடு மற்றும் மக்களின் அடிப்படை வசதிகள், கல்வி, கணினி பயன்பாடு போன்ற தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளது. இந்த கணக்கெடுப்பானது ஜூன்-2023 வரை நடைபெற உள்ளது. இந்த தேசிய மாதிரி ஆய்வு திட்டத்தின் வாயிலாக 79-வது சுற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் 8 கிராமங்களிலும், நகர்புற பகுதிகளில் 12 இடங்களிலும் மாதிரி கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.

இந்திய அரசால் நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பு தமிழ்நாடு அரசு பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை பணியாளர்கள் மூலம் நடத்தப்பட உள்ளது. இதற்கான பயிற்சி வகுப்பு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புள்ளி இயல் துணை இயக்குநர் (கன்னியாகுமரி) தலைமையில் கோட்ட புள்ளி இயல் உதவி இயக்குநர், புள்ளி இயல் அலுவலர் மற்றும் வட்டார புள்ளி இயல் ஆய்வாளர்களுக்கு வழங்கப்பட்டது. எனவே இந்த கணக்கெடுப்புக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

Related Stories: