பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவர் கைது

திருப்பூர்,அக். 1:திருப்பூர், கொங்கு மெயில் ரோட்டில் நேற்று சந்தேகத்திற்கிடமாக இருந்த வாலிபரை பொதுமக்கள் சுற்றிவளைத்து விசாரித்தனர். விசாரணையில் அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்து விட்டு பைக்கை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பியோடினார். இது குறித்து பொதுமக்கள் வடக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இரு சக்கர வாகனத்தை மீட்டு சோதனை நடத்தினர். போலீசார் சோதனையில் அந்த வாகனத்தில் செல்போன் மற்றும் கவரிங் நகைகள் இருந்தது.

வாகன எண்ணை வைத்து பார்க்கும் போது அந்த வாகனம் ஊத்துக்குளி பகுதியை சேர்ந்தவரின் வாகனம் என்பது தெரியவந்தது. இந்நிலையில் ஊத்துக்குளி போலீசார் நேற்று அப்பகுதியை சேர்ந்த கணேஷ் (42) என்பவரை பிடித்து விசாரித்தனர். போலீசார் விசாரணையில் அவர் ஊத்துக்குளி டவுன் பகுதியில் இருந்து வாகனத்தை திருடி வந்து, கொங்கு மெயின் ரோட்டில் ரோட்டில் நடத்து சென்ற பெண்ணிடன் நகை பறிக்க முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கணேசை கைது செய்தனர்.

Related Stories: