வண்டிப்பெரியாறில் பஸ், லாரி மோதிய விபத்தில் 25 பேர் காயம்

மூணாறு, அக். 1: இடுக்கி வண்டி பெரியாறில் தனியார் பேருந்தும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 25 பேர் காயமடைந்துள்ளனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், வண்டிப்பெரியார் காவல் நிலையம் அருகே நேற்று காலை 9.30 மணியளவில் தொடுபுழாவில் இருந்து குமுளியை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தும், குமளியில் இருந்து முண்டக்காயம் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள், லாரி டிரைவர், க்ளீனர் என 25 பேர் காயமடைந்தனர். சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், காவல்துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பீருமேடு தாலுகா மருத்துவமனை, வண்டிப்பெரியார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த எருமேலி பகுதியை சேர்ந்த ஷாஹாஸ் (35), ஜித்தின் (30), நௌபல் (40), தொடுபுழாபகுதியை சேர்ந்த மாடசேரில் ஸிபின் (39), கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த ரேஷ்மா (26) மற்றும் டிப்பர் லாரி டிரைவர், அவருடன் பயணித்த க்ளீனர் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: