பரமக்குடி பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா: எம்எல்ஏ வழங்கினார்

பரமக்குடி, அக். 1: பரமக்குடி தொகுதியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ முருகேசன் வழங்கினார். பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பார்த்திபனூர் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியர் வேல்முருகன் தலைமை வகித்தார், நெல்மடூர் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா சதீஷ்குமார், பரமக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர் காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் கலந்து கொண்ட பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் 94 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமு,

கிளை செயலாளர் முருகவேல், மற்றும் மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காரடர்ந்தகுடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்றிய செயலாளர் சக்தி தலைமையில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் எம்எல்ஏ முருகேசன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், துணை செயலாளர்கள் ராமு, திலகர், பஞ்சாயத்து தலைவர் நந்தகோபால் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கு பள்ளித் தலைமையாசிரியர் மீனாட்சிசந்தரம், முன்னிலை வகித்தார். இதில் ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Related Stories: