திண்டுக்கல் ஞானகணபதி ேகாயில் கும்பாபிஷேகம்

திண்டுக்கல். அக். 1: திண்டுக்கல் கக்கன் நகரில் பகுதியில் உள்ள  பாரதி ஞானகணபதி கோயிலில் நேற்று மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் முதல் கால யாக வேள்வி நடந்ததை தொடர்ந்து நேற்று காலை இரண்டாம் கால யாக வேள்வி நடந்தது. தொடர்ந்து கணபதி ஹோமம் பூர்ண பகுதியுடன் கடம் புறப்பாடு நடைபெற்று கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலவருக்கு புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேக,

அலங்காரம், பூஜைகள் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ல சுக்காம்பட்டி சுவாமிகள், பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார், மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா, மாநில வர்த்தக அணி இணை செயலாளர் ஜெயன், முன்னாள் கவுன்சிலர் விஜயகுமார், பகுதி செயலாளர் ராஜேந்திரகுமார் மற்றும் தொழிலதிபர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: