சிறுகனூரில் பள்ளத்தில் கவிழ்ந்த மொலாசிஸ் ஏற்றி வந்த லாரி

திருச்சி,செப்.30: பெரம்பலூர் கரும்பு ஆலையில் இருந்து 20ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள லாரியில் ஸ்பிரிட் தயாரிக்க பயன்படுத்தும் மொலாசிஸ் என்ற கழிவை லால்குடி காட்டூர் சர்க்கரை ஆலைக்கு ஒரு டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே உள்ள லால்குடி பிரிவு சாலையில் திரும்பும்போது அருகில் இருந்த சிறு பள்ளத்தில் டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. லாரியின் பழு தாங்காமல் அந்த பள்ளத்தில் இருந்த மண் சரிந்து பெரிய குழியாக மாறியதால் லாரி தலை கீழாக கவிழ்ந்து அதில் இருந்த மொலாசிஸ் அனைத்தும் அந்த பள்ளம் முழுவதும் நிரம்பியது. இதுபற்றி தகவல் அறிந்ததும் சிறுகனூர் போலீசார் விரைந்து வந்தனர்.

பிறகு நீண்ட நேரத்திற்கு பிறகு மாற்று வண்டி ஏற்பாடு செய்யப்பட்டு அந்த லாரியில் இருந்து மாற்று லாரிக்கு மோட்டார் மூலம் டேங்கில் இருந்த மொலாசிஸ்சை ஏற்றும் பணி நடைபெற்றது. அதன்பின் அங்கிருந்து புறப்பட்டு லால்குடி காட்டூர் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் கவிழ்ந்து கிடந்த லாரியை பொக்லைன் மூலம் மீட்கும் பணிகள் நடைபெற்றது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லாரி நடுரோட்டில் கவிழவில்லை. தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து இருந்தால் மொலாசிஸ் முழுவதும் சாலை முழுவதும் ஊற்றி நிலைமை மோசம் அடைந்து பெரும் விபத்துக்கள் கூட ஏற்பட்டிருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: