நெல்லை, செப். 30: நெல்லையில் மாநகர திமுக சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில அளவிலான அமர்வு கைப்பந்து போட்டி நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் வழங்கல் துவங்கியது. திமுக இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளான ‘மனிதநேய உதயநாளை’ முன்னிட்டும், நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வஹாப் எம்எல்ஏ ஆலோசனையின் பேரிலும் நெல்லையில் மாநகர திமுக சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில அளவிலான அமர்வு கைப்பந்து போட்டி நடக்கிறது.