வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா

சேலம், செப். 30: தாரமங்கலம் வட்டாரத்தில் நாளை (1ம் தேதி) வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது: சேலம் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (மகளிர் திட்டம்) மூலம், தாரமங்கலம் வட்டாரத்தில் நாளை (1ம் தேதி) சனிக்கிழமை  வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா நடைபெறுகிறது. இதில் அரசுத் துறைகளின் மூலம், பல்வேறு பயிற்சிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. இந்த முகாமானது ஓமலுர் மெயின் ரோடு, தாரமங்கலம் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதில் 18 முதல் 45 வயது வரை உள்ள படித்த, படிக்காத இருபாலரும் கலந்து கொண்டு தேவையான கட்டணமில்லா பயிற்சிகளை தேர்வு செய்து, தனியார் நிறுவனங்களில் பயிற்சி பெற்றுக் கொள்ளலாம்.

பயிற்சி காலத்தில் தேவையான உபகரணங்கள், கையேடு, சீருடை, ஆங்கில அறிவு பயிற்சி மற்றும் இதர மதிப்புக்கூட்டு பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. பயிற்சியின் நிறைவில் தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். தாரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள  இளைஞர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் ெதரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: