ஓசஅள்ளி ஊராட்சியில் தலைமை பொறியாளர் ஆய்வு

கடத்தூர், செப்.30: கடத்தூர் ஒன்றியம் ஓசஅள்ளி ஊராட்சியில் சென்னை ஊரக தலைமை பொறியாளர் வளர்ச்சி திட்ட பணகளை ஆய்வு செய்தார். கடத்தூர் ஒன்றியம் ஒசஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட போசிநாயக்கனஅள்ளி, முருங்கை நாற்றங்கால் பண்ணை மற்றும் வேடியூர் தொடக்க பள்ளி சுற்றுச்சுவர் மற்றும் புதியதாக அமைக்கப்பட்ட கிராம சாலை உள்ளிட்ட திட்ட பணிகளை சென்னை ஊரக துறை தலைமை பொறியாளர் அரிகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது ஓசஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம், கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கல்பனா, ரேணுகாதேவி, செயற்பொறியாளர் முத்துசாமி, உதவி செயற்பொறியாளர் ஜெகதீஷ் குமார், சண்முகம் சுமதி ஒன்றிய மேற்பார்வையாளர்கள் அன்னபூரணி மற்றும் அன்பழகன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். ஆய்வின் போது கடத்தூர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Related Stories: