ஆபத்தான அங்கன்வாடியை அகற்ற கோரிக்கை

தொண்டி,செப்.30: நம்புதாளை அரசு உயர் நிலைப்பள்ளி வளாகத்தில் பயன்பாடற்ற அங்கன்வாடி கட்டிடத்தை ஆபத்து ஏற்படுத்தும் முன்பு இடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி அருகே நம்புதாளை அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில் இடிந்த நிலையில் அங்கன்வாடி கட்டிடம் உள்ளது. கடந்த சில வருடங்களாக அங்கன்வாடி செயல்படாததால் எவ்வித பயன்படும் இல்லாமல் இடிந்த நிலையில் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இங்கு படிக்கும் மாணவ,மாணவியர் இந்த இடிந்த கட்டிடத்தின் அருகில் தான் விளையாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வித பயனும் இல்லாமல் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ள கட்டிடத்தை இடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஆறுமுகம் கூறியது, எவ்வித பயன்பாடும் இல்லாமல் இடத்தை அடைத்துக் கொண்டு இந்த கட்டிடம் உள்ளது. உயர் நிலைப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் இடவசதி இல்லாமல் நெறுக்கடியில் படித்து வருகின்றனர். அங்கன்வாடி கட்டிடத்தை இடித்து விட்டு அந்த இடத்தில் உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டித் தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: