ஆர்.கே.பேட்டை அருகே மாற்று இடத்தில் ஊராட்சி அலுவலகம் கட்ட எதிர்ப்பு

பள்ளிப்பட்டு,செப். 29: ஊராட்சிமன்ற அலுவலகத்திற்கு மாற்று இடத்தில் புதிய கட்டம் கட்ட கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் எஸ்.வி.ஜி.புரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட்டு வந்தது. அலுவலக கட்டிடம் பழுதடைந்து உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே அந்த  தற்காலிகமாக மகளிர்திட்ட கட்டிடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில். ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட தமிழகஅரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில், எஸ்.பி.கண்டிகையில் புதியகட்டிடம் கட்ட ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு எஸ்.வி.ஜி.புரம், கலைஞர்நகர், அருந்ததிகாலனி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 50க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்ற ஆர்பாட்டத்தில் புதிய கட்டிடத்தை வேறு ஒரு இடத்தில் கட்டக்கூடாது என்று வலியுறுத்தினர். பொதுமக்கள் போராட்டம் எதிரொலியாக ஆர்.கே.பேட்டை காவல் ஆய்வாளர் ராஜ் தலைமையில் போலீசார் எஸ்.வி.ஜி.புரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: