அய்யலூரில் அமையுமா புறக்காவல் நிலையம் ெபாதுமக்கள் எதிர்பார்ப்பு

வடமதுரை, செப். 29: அய்யலூரில் குற்றச்சம்பவங்களை தடுக்க புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடமதுரை, அய்யலூரை சுற்றி ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள விவசாயிகள்,  வியாபாரிகள் என பல்வேறு தரப்பினரும் அய்யலூர் வந்து செல்கின்றனர். இதனால் அய்யலூர் பகுதி காலை துவங்கி இரவு வரை எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது. இங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் இங்கு போலீஸ் நிலையம் அமைக்க இரும்பு பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது அது பயனின்றி உள்ளதால் சமூகவிரோதிகளின் கூடாரமாக உள்ளது.

இதனால் மாணவிகள், பெண்கள் அச்சத்துடன் அப்பகுதியை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. தவிர புறக்காவல் நிலையம் பயன்பாடின்றி காணப்படுவதால் விஷஜந்துக்கள் உள்ளே புகுந்து விடுகின்றன.மேலும் கடந்த வாரம் பஸ் நிறுத்தத்திற்கு அருகே ஆட்டோ ஒன்று திருடு போனது இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், அய்யலூரில் புறக்காவல் நிலையம் இருந்திருந்தால் இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் நடந்திருக்காது. எனவே இதனை புறக்காவல் நிலையம் ஆக மாற்றி போலீசாரை நியமிக்க வேண்டும். அதன்மூலம் குற்றச்சம்பவங்களை தடுக்கப்படும்’ என்றனர்.

Related Stories: