தொழிலாளர்கள் அவதி பொதுப்பணித்துறை சாலைகளில் ஆய்வு பணி துவங்கியது

பாலக்காடு, செப். 28:  பாலக்காடு மாவட்ட பொதுப்பணித்துறையினர், சாலைகளில் ஆய்வுப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.  பாலக்காடு மாவட்டத்தில் கடந்த மழைவெள்ளத்தால் பெரும்பாலான இடங்களில் மண்ணரிப்பு ஏற்பட்டும், சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. ஒப்பந்த அடிப்படையில் சீரமைக்கும் பணியை மதிப்பீடு செய்வதன் ஒரு பகுதியாக ஆய்வு தொடங்கியுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் திருத்தாலா, ஷொர்ணூர், ஒத்தப்பாலம், ஆலத்தூர், குழல்மந்தம், கொழிஞ்சாம்பாறை ஆகிய இடங்களில் சாலைகளை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை கோழிக்கோடு மேற்பார்வை பொறியாளர் பிந்து தலைமையில் பாலக்காடு மாவட்டம் திருத்தாலாவில் மூன்று தொகுதிகளில் சுமார் 28 சாலைகள் ஆய்வு செய்யப்பட்டது. சாலை பராமரிப்பு செயற்பொறியாளர் முகமது இஷாக், கட்டட செயற்பொறியாளர் ராஜேஷ் சந்திரன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஒப்பந்தத்தாரர்கள் ஒப்பந்தப்படி சாலைப் பணிகள் சுமூகமாக நடக்கிறதா என சரிபார்க்கப்படுகிறது. நாளையும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

Related Stories: