குழந்தைக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது

செங்கல்பட்டு, செப். 28: செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் அடுத்த கொளத்தாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் முருகன் இவரது மகன் கண்ணன் (எ) கார்த்திக் (31) கூலி வேலை செய்துவருகிறார்.  இவரது வீட்டின் அருகே உள்ள 3வயது சிறுமி கார்த்திக்கின் வீட்டுக்கு விளையாட செல்வது வழக்கம். மேலும், கார்த்திக் தனது செல்போனில் கேம் புரோகிராம் வைத்து செல்போனை சிறுமிக்கு தருவதால் சிறுமி எப்போதும் இவரது வீட்டிலேயே   இருந்து வந்துள்ளார்.

கார்த்திக் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம். சில நாட்களாக சிறுமிக்கு  பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். திடீரென ஒருநாள் குழந்தையின் உடலில் சில மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தாயிடம் கூறியுள்ளார். காயங்கள் இருந்ததால் கார்த்திக் மீது பாலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கை  செங்கல்பட்டு மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனடிப்படையில் கார்த்திக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு அவரை போக்சோ வழக்கின் கீழ் நேற்று கைது செய்து செங்கல்பட்டு சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Related Stories: