வத்தலக்குண்டு சென்றாய பெருமாள் கோயில் கோபுரம் கட்டும் பணியை விரைவுபடுத்த கோரிக்கை

வத்தலக்குண்டு, செப். 27: வத்தலக்குண்டு சென்றாய பெருமாள் கோயில் கோபுரம் கட்டும் பணியை விரைவுபடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலக்குண்டுவில் கோட்டைப்பட்டி சென்றாய பெருமாள் கோயில் உள்ளது. 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானவர்கள் வந்து பெருமாளை தரிசித்து செல்கின்றனர்.

இந்து சமய அறநிலைத்துறை நிர்வாகத்தில் உள்ள இக்கோயில் கோபுரம் கட்டும்பணி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. தற்போது அந்த பணி பாதியில் நின்று விட்டது. எனவே கோபுரம் கட்டும்பணியை விரைவாக நடத்தி கோயில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Related Stories: