61வது பிறந்த நாள் ராமஜெயம் சிலைக்கு அமைச்சர்-திமுகவினர் மரியாதை

திருச்சி, செப்.23: திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பியும், தொழிலதிபருமான கே.என்.ராமஜெயத்தின் 61வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்சி-திண்டுக்கல் சாலையில் கேர் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு, திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி கேர் கல்லூரியில் அமைந்துள்ள ராமஜெயம் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தலைமை கொறடா கோவி.செழியன் கிழக்கு மாநகரச் செயலாளரும் மண்டலத் தலைவருமான மதிவாணன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் ராமஜெயம் சிலை மற்றும் உருவப்படத்திற்கு கே.என்.நேருவின் சகோதரர்கள் கே.என்.ரவிச்சந்திரன், கே.என்.மணிவண்ணன், மற்றும் கே.என்.அருண் நேரு தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மேயர் அன்பழகன், திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, எம்எல்ஏக்கள் காடுவெட்டி தியாகராஜன், சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, டோல்கேட் சுப்பிரமணி, மாவட்ட துணை செயலாளர் முத்துச்செல்வம், கோட்டத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்காதேவி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், துறையூர் நகர செயலாளர் மெடிக்கல் முரளி உள்பட ஏராளமான நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர்.

Related Stories: